செய்திகள்

நேபாளம் விமான விபத்தில் பலியானவர்களுக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல்

நேபாளம் விமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். #Nepalplanecrash #killed

மாலை மலர்

நேபாளம் விமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு வந்த யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காத்மாண்டுக்கு சென்றது. அதில், நேபாள நாட்டை சேர்ந்த 33 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த 32 பேரும், சீனா மற்றும் மாலத்தீவை சேர்ந்த தலா ஒருவரும் பயணம் செய்ததாகவும், விமானிகள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 71 பேர் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. வானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதை எல்லைக்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக நேபாளம் நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கோகுல் பன்டாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நேபாளம் விமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.