காரைக்கால்:
காரைக்கால் பகுதியினர் பாஸ்போர்ட் பெறுவதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள சேவை மையத்தைப்போல காரைக்கால் பகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறைக்கு புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே, சமீபத்தில் காரைக்கால் வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காரைக்காலில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனுமதி அளித்துள்ள தகவலை தெரிவித்தார்.
இந்நிலையில், காரைக்கால் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வந்தடைந்தார். காரைக்கால் வந்த அவரை புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது குற்ப்பிடத்தக்கது.#passport #sushmaswaraj #tamilnews