மறைந்த முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அனைவரிடமும் எளிமையாக பழகும் பண்பு கொண்டவர்.
சுஷ்மா சுவராஜ் 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்தார். அப்போது தமிழக பா.ஜனதாவின் துணைத் தலைவராக இருந்த லலிதா சுபாஷிடம் அன்பாக பழகினார். அவருடன் சேர்ந்து பொருட்கள் வாங்குவதற்காக தி.நகருக்கு சென்றார்.
சுஷ்மா சுவராஜின் எளிமையும், பழகும் பண்பும் என்றும் மறக்க முடியாதவை. அவர் சென்னை வந்தபோது தி.நகர் பாண்டி பஜார் சென்று பொருட்கள் வாங்க விரும்பினார். அங்கு வெளியே விற்ற உணவுப் பொருட்கள் முதல் துணிகள் வரை அனைத்தையும் வாங்கி மகிழ்ந்தார். பின்னர் சென்னை கடற்கரைக்கு சென்று மகிழ்ந்தோம். அந்த அளவு எளிமையாக பழகினார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் சுஷ்மா சுவராஜ் உடன் சென்றேன். எங்கள் தோழிகளும் உடன் வந்தனர். அப்போது அவருக்கு ரூ.200 மதிப்புள்ள நினைவு பரிசு வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு 1200 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். போர்ட்பிளேயரில் சுதந்திர போராட்ட தியாகியும் இந்து மகாசபை தலைவருமான வீர் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை நினைவிடத்தை பார்த்தோம்.
மல்லிகைப்பூ வைத்துக் கொள்வதை சுஷ்மா மிகவும் விரும்புவார். எப்போதும் சுத்தமான உடை அணிவதில் கவனம் செலுத்துவார். என்னிடம் மட்டுமல்ல பழகிய அனைவரிடமும் அன்பு கொண்டவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுஷ்மா அனைவரிடமும் நட்புடன் பழகும் பண்பு கொண்டவர். உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவருடைய எளிமை சிறப்பானது. அவரை கடந்த செவ்வாய்க்கிழமை, பாராளுமன்ற கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலை 10.30 மணிக்கு சந்தித்தேன். 11 மணி வரை பேசி விட்டு விடைபெற்றேன்.
அன்று இரவு அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு நல்ல பண்பாளரான சுஷ்மா சுவராஜ் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.