ரியா சக்ரபோர்த்தி சகோதரர் ஷோவிக் 
செய்திகள்

சுஷாந்த் சிங் வழக்கு: ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது

சுஷாந்த் சிங் வழக்கில் விசாரணை நடத்தி வரும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரரை கைது செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையல் போதை பொருளும் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டு போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில் ராஜ்புத் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா மற்றும் ரியா சக்ரபோர்த்தி சகோதரர் ஷோவிக் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இருவரிடமும் போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்திய பின்னர் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்ட இருவரிடம் வீட்டிற்கும் சென்று அதிகாரிகள் சோதனை செய்த செய்தது. ஏற்கனவே போதைபொருள் விற்பனை செய்யும் இரண்டு டீலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.