கேமரா 
செய்திகள்

குற்றச்செயல்களை தடுக்க கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா

குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும், வெளி ஆட்கள் ஊருக்குள் கொரோனா பரவுவதை தடுக்கவும் கிராமத்தின் முக்கியமான 13 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

மாலை மலர்

கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் உன்னிப்பட்டியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு இரண்டு சமூகத்திற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இதனால் அந்த கிராமத்தில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும், வெளி ஆட்கள் ஊருக்குள் கொரோனா பரவுவதை தடுக்கவும் கிராமத்தின் முக்கியமான 13 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாதேவி செந்தில்குமார், இளைஞர்களை ஒன்று திரட்டி சொந்த செலவில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். முக்கிய சந்திப்புகள், பள்ளி, கோவில், பஞ்சாயத்து அலுவலகங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் செயல்பாடுகள் அனைத்தும் பஞ்சாயத்து தலைவர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்படும்.