செய்திகள்

ரெயிலின் தரையில் படுத்து தூங்கிய மாற்றுத்திறனாளி வீராங்கணை - விசாரணைக்கு மந்திரி உத்தரவு

டெல்லிக்கு ரெயில் பயணம் செய்த மாற்றுத்திறனாளி வீராங்கணை சுவர்ணராஜ்க்கு உரிய படுக்கை வசதி கொடுக்காததால், தரையில் படுத்து தூங்கியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சுவர்ணராஜ், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கணையான இவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவில் இருமுறை பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், சுவர்ணராஜ் நேற்று நாக்பூரிலிருந்து டெல்லிக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அவருக்கு அப்பர் பெர்த் எனும் மேல் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டிருந்தது.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர் மேலே ஏறிச்சென்று படுக்க முடியாது என்பதால், பயணச்சீட்டு பரிசோதகரிடம் லோயர் பெர்த் எனும் கீழ்நிலை படுக்கை வசதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை பரிசோதகர் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து, அவர் இரவில் தரையில் படுத்து உறங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT