சென்னை:
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் சுமார் 80 மணி போராட்டத்திற்கு பிறகு பிணமாக மீட்டப்பட்டார். சுஜித் உடலுக்கு பல்வேறு தரப்பிரினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் பக்கத்தில் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? சுஜித் இழப்பு குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு. இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.