நாகர்கோவில்:
சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை கடைப் பிடிக்க வேண்டிய இந்த சூழ்நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு பல்வேறு சிரமங்கள் மட்டுமின்றி பொருளாதரத்திலும் சிரமப்படுவீர்கள் என்பதை உங்களா தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகிய நான் நன்கு அறிவேன். இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் நாம் வசிக்கக்கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும் இல்லாதவர்களுக்கு இருக்கக்கூடியவர்கள் முடிந்தவரை உதவி செய்வது நமது கடமையாகும்.
இப்போது உள்ள கால கட்டத்தில் இந்த உதவி மிகப் பெரிய பேர் உதவியாக இருக்கும். அதையும் தாண்டி தொகுதி மக்களுக்கு ஒரு இன்னல் என்று சொன்னால் சட்டமன்ற உறுப்பினராகிய எனக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தால் உங்களுடைய குறைகளை என்னால் முடிந்த அளவுக்கு தீர்த்து வைக்க விரும்புகிறேன்.
எனவே தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் குடிநீர் பிரச்சினை, தெருக்களில் கிருமி நாசினி கள் தெளிக்கப்படாமல் இருத்தல் மற்றும் பொது பிரச்சினைகளை (உணவு உள்பட) ஏதுவாக இருந்தாலும் கீழ்க்கண்ட தொலைபேசியில் எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசி எண்கள்- 04652-232110, 276102. நீங்கள் தரக்கூடிய தகவலின் அடிப்படையில் எங்களுடைய பிரதிநிதிகள் நேரடியாக வந்து நீங்கள் கூறிய புகார் உண்மையெனில் அந்த குறைகளை தீர்க்ககூடிய முயற்சிகளில் முடிந்த அளவுக்கு ஈடுபடுவார்கள். கொரோனா நோய் தடை உத்தரவு முடிந்த பிறகு நான் உங்கை நேரடியாக சந்திக்க வருவேன் என்பதையும் அதுவரையிலும் தங்களை தாங்கள் தனிமைப்படுத்தி எந்தவிதமான நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதை கூறுவதோடு உங்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.