உச்சநீதின்றம் 
செய்திகள்

பெகாசஸ் உளவு விவகாரம்: நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை கோரிய வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

பெகாசஸ் உளவு விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் சுதந்திர விசாரணை நடைபெற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலரது செல்போன் உரையாடல்களை பெகாசஸ் என்னும் செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக்கேட்டது என்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின.

பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பத்திரிகையாளர் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 13-ந்தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.

SCROLL FOR NEXT