சுப்ரீம் கோர்ட் 
செய்திகள்

கணவர் நடராஜன் செலுத்திய ரூ.25 லட்சம் பிணைத்தொகையை சசிகலா கேட்டால் திருப்பி தரப்படும் - சுப்ரீம் கோர்ட்டு

கணவர் நடராஜன் செலுத்திய ரூ.25 லட்சம் பிணைத்தொகையை சசிகலா கேட்டால் திருப்பி தரப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரது கணவர் மறைந்த நடராஜன் மீது சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நடராஜன் ஜாமீன் பெற்ற போது சுப்ரீம் கோர்ட்டில் ரூ.25 லட்சம் பிணைத்தொகையை செலுத்தி இருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடராஜன் மரணம் அடைந்ததால் அவரை சொகுசு கார் வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.

இந்த நிலையில் நடராஜன் செலுத்திய ரூ.25 லட்சம் பிணைத்தொகையை சசிகலா கேட்டால் திருப்பி தரப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் கணவர் செலுத்திய பிணைத்தொகையை மனு அளித்துகேட்டால் திருப்பி கொடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.