செய்திகள்

குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தினகரன் வழக்கு- தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் நாளை பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #EC #TTVDhinakaran

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தினகரன் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.