செய்திகள்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரும் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

தலைநகர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு மீதான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #Supreme Court

மாலை மலர்

புதுடெல்லி:

கடும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தலைநகர் டெல்லி சிக்கித் தவித்து வருகிறது. எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக தலைநகர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடவேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மதன் பி.லோகுர், எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க இயலாது என்று ஏற்கனவே கடந்த ஜூலை 4–ம் தேதி அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #Supreme Court