புதுடெல்லி:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பா.ஜனதா இன்று (வெள்ளிக்கிழமை) அறிமுகம் செய்கிறது. கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இதை அறிமுகப்படுத்துகிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு மனப்பான்மையில் உள்ள மக்கள், இந்த எண்ணுக்கு ‘மிஸ்டு கால்‘ கொடுத்து தங்கள் ஆதரவை பதிவு செய்யலாம்.
இதுபோல், குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மைத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விளக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. 5-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நாடு முழுவதும் மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த தலைவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். டெல்லியில் 5-ந் தேதி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் அமித் ஷா, வீடு வீடாக செல்ல உள்ளார்.