ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார். அவர் இன்று சென்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
தனியார் ஓட்டலில் நடந்த இந்நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், திருநாவுக்கரசர், ராமசாமி, டி.கே.ரங்கராஜன், கனிமொழி, டி.ராஜா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி மீரா குமார் வேண்டுகோள் விடுத்தார். அப்போது பேசிய மீரா குமார், கொள்கை அடிப்படையிலேயே கட்சிகள் தன்னை ஆதரிப்பதாக தெரிவித்தார்.