செய்திகள்

பீர் பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட சூப்பர்வைசர் மண்டை உடைப்பு

செங்குன்றம் அருகே பீர் பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட சூப்பர்வைசர் மண்டையை 2 வாலிபர்கள் உடைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

செங்குன்றம்:

செங்குன்றம் அடுத்த அம்பேத்கார் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 வாலிபர்கள் பீர் வாங்கினர். அப்போது ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.15 ஊழியர்கள் கேட்டனர்.

அதை கொடுத்து பீர் பாட்டிலை வாங்கி சென்ற அவர்கள் மீண்டும் கூடுதலாக பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர்.

அதன்பிறகு இரவு அந்த வாலிபர்கள் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வந்து பீர் வாங்கும்போது நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் ஏன் வாங்குகீர்கள் என்று சூப்பர்வைசர் ராமனிடம் கேட்டனர்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு வாலிபர் பீர் பாட்டிலால் ராமன் மண்டையில் அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதை பார்த்த குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த சூப்பர் வைசர் ராமன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT