பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினார்கள். கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இருவரும் நடத்திய வாணவேடிக்கையை பார்க்கும்போது ஹைலைட் போட்டியை பார்த்ததுபோல் இருந்தது.
கிறிஸ் லின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 2-வது ஓவரில் சுனில் நரைன் ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை சாஹல் வீசினார் அந்த ஓவரில் லின் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.
4-வது ஓவரை பத்ரி வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் ஹாட்ரிக் சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அரவிந்த வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். 5-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி அரைசதம் அடித்தார். வெறும் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதத்தை எட்டினார் சுனில் நரைன்.