செய்திகள்

பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜர் தங்கம் வென்று சாதனை

பாரா தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாலை மலர்

லண்டன்:

சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டன் நகரில் நேற்று தொடங்கின. இப்போட்டிகளில் 92 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்குபெற்றுள்ளனர். 

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் சுந்தர்சிங் குர்ஜர் பங்குபெற்றார். இவர் 60.36மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். 

வெற்றி பெற்றபின் நிருபர்களிடம் பேசிய குர்ஜர் “வெல்ல வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. அதற்காக கடந்த நான்கு வருடம் கடுமையாக உழைத்துள்ளேன்” என்று கூறினார். 

இது இந்த வருடம் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கமாகும். முதல் நாள் முடிவில் ஒரு தங்கப்பதக்கத்துடன் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்போட்டியை நடத்தும் பிரட்டன் மூன்று பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.