சுந்தர் சிங் 
செய்திகள்

உலக பாரா தடகளம்: இந்திய வீரர் சுந்தர் சிங் தங்கம் வென்றார் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுந்தர் சிங் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 61.22 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தக்கவைத்தார். மற்றொரு இந்திய வீரர் அஜீத் சிங் 59.46 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

இன்னொரு இந்திய வீரர் ரிங்கு 4-வது இடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங் மற்றும் ரிங்கு ஆகியோர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

SCROLL FOR NEXT