செய்திகள்

சூலூர் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

சூலூர் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். மில் தொழிலாளி. இவரது மகள் அனிதா (வயது 16). இவர் பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

சம்பவத்தன்று அனிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் இருந்த அனிதா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்பிய அவரது பெற்றோர் அனிதா தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.