செய்திகள்

ஏம்பலத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

வில்லியனூர்:

ஏம்பலம் அருகே மனக்குப்பத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கார்த்திபட்டு. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

குடி பழக்கம் உள்ள அய்யப்பன் தினமும் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவார். மனைவி பணம் கொடுக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் விடுப்பார்.

அதே போல் சம்பவத்தன்று அய்யப்பன் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது மின் விசிறியில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.