காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த கந்தகார் மாகாணத்தின் தமான் மாவட்டத்தில் இன்று திடீரென கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. ரோமானிய படையினர் தங்கிருந்த முகாமை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் அருகிலிருந்த மதராசா பள்ளி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதில், 11 மதரசா மாணவர்கள் பலியாகினர். மேலும், 5 ரோமானிய வீரர்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காபூல் நகரில் உளவுத்துறை நிறுவனம் அருகே நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக நடத்தப்படும் வெடிகுண்டு தாக்குதல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Afghanistan #Kandahar