செய்திகள்

ஈராக்கில் தொடரும் தற்கொலைப் படை தாக்குதல் - 2 போலீசார் பலி

ஈராக் நாட்டில் போலீஸ் சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Iraq #IS #SucideAttack

மாலை மலர்

பாக்தாத்:

ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack