போகோஹரம் பயங்கரவாதிகள் 
செய்திகள்

கேமரூன்: போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி

கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

டுவாலா:

ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், நைஜீரியா, சாட், மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளை ஒன்றினைத்து இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்தோடு போகோஹரம் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத குழு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியா நாட்டுடன் எல்லையை பகிர்ந்துள்ள கேமரூன் நாட்டின் மோசோஹா மாகாணம் ஹூலீவேட் என்ற கிராமத்திற்குள் நேற்று புகுந்த போகோஹராம் பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பொதுமக்கள் கூடியிருந்த பகுதியின் அருகே வெடிக்கச்செய்தான்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஹூலீவேட் கிராமத்தின் தலைவரும் உள்ளடக்கம் ஆகும். 

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.