மரணம் 
செய்திகள்

தூசி அருகே பயிருக்கு மருந்து அடித்த விவசாயி திடீர் மரணம்

தூசி அருகே பயிருக்கு மருந்து அடித்த விவசாயி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

திருவண்ணாமலை:

தூசி அருகே உள்ள வெள்ளமலை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது48). இவர் கடந்த 7-ந் தேதி விவசாய பயிருக்கு மருந்து அடித்தார். அப்போது திடீரெண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டார்.

இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

இதுகுறித்து ஏழுமலை மகள் சுசித்ரா கொடுத்த புகார் மீது தூசி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.