செய்திகள்

நோட்டாவுக்கும் கீழே பா.ஜ.க ஓட்டு: பொறுப்புடைமைக்கான நேரம் என்கிறார் சுப்பிரமணிய சாமி

ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகளில் நோட்டாவுக்கும் கீழே பா.ஜ.க வாக்குகள் பெற்றுள்ளதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

சென்னை ஆர்.கே நகரில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 5 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் 24 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க 408 வாக்குகள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளன. நோட்டாவை விட குறைவாக பெற்றுள்ளதை அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார். ‘மத்தியில் ஆளும் கட்சி நோட்டவைவிட கால் பங்கு மட்டுமே பெற்று சாதித்துள்ளது. பொறுப்புடைமைக்கான நேரம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.