சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து இன்று சென்னை திரும்பியதும் அவரை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கார்த்தி சிதம்பரம் கைது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியதாவது:-
கார்த்தி சிதம்பரம் கைது எதிர்பார்த்த ஒன்றுதான். சி.பி.ஐ. அமலாக்க துறை விசாரணையின் போது அவர் பொய் கூறி உள்ளார். இந்த முறைகேடு வழக்கில் முதலில் ப.சிதம்பரத்தை கைது செய்து இருக்க வேண்டும். அவர் கையெழுத்திட்டதால்தான் முறைகேடு நடந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KartiChidambram #INXmediacase #KartiArrested #Tamilnews