ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டத்தில் உள்ள குக்நூர் காவல் நிலையத்தில் பிரபாகர் ரெட்டி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். பொகங்கீர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு பிரபாகர் ரெட்டி சப் இன்ஸ்பெக்டராக தேர்வானார். கடந்த ஆண்டு தான் குக்நூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் காவல் நிலையத்திலேயே பிரபாகர் ரெட்டி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டதாக பிரபாகர் ரெட்டி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குக்நூர் காவல் நிலையத்தில் கடந்த 10 மாதங்களில் 2-வது சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு குக்நூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணா ரெட்டி(45). உயரதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியாமல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.