செய்திகள்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா போராடி தோல்வி

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி ஒன்றில் தடையில் இருந்து மீண்டு வந்த ஷரபோவா பிரான்ஸ் வீராங்கனையிடம் போராடி தோல்வியுற்றார்.

மாலை மலர்

முதல் செட்டை மரியா ஷரபோவா 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் மிலாடெனோவிச் அபாரமாக விளையாடினார். மரியா ஷரபோவாவும் இணையாக போராட இறுதியில் மிலாடெனோவிச் 7-5 என அந்த செட்டை கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் மிலாடெனோவிச்சின் கையே ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி ஷரபோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.