செய்திகள்

சிபிஎஸ்இ அலுவலகம் முன் மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகம் முன்னால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. #Cbse #PaperLeak #Students

மாலை மலர்

புதுடெல்லி:

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 12ம் வகுப்புக்கான பொருளாதாரம், 10ம் வகுப்புக்கான கணிதம் ஆகியவற்றின் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கிடையே, 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ நேற்று அறிவித்துள்ளது.

டெல்லியில் சிபிஎஸ்இ கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதை கண்டித்து மாணவர்கள் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கும் சிபிஎஸ்இக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள சி பி எஸ் இ அலுவலகம் அமைந்துள்ள பிரீத் விஹார் பகுதியில் மாணவர்கள் கூடினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். #CBSEPaperLeak #Students #Tamilnews