தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் முழங்காலை மறைக்கும் வகையில் உள்ள குர்தாக்களை மட்டுமே அணிய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து கல்லூரியின் இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கல்லூரி மாணவிகள் நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.