செய்திகள்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு - கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள் புகார்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். #StudentsDatabaseLeaked

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் விவரத் தொகுப்பு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்கும் விற்பனை செய்யப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை உயரதிகாரிகள் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் சென்றது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #StudentsDatabaseLeaked