செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பரிதாப பலி

கோவையில் வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்தான்.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் வி.சி.வி.ரோடு பகுதியை சேர்ந்தவர் பவர்லால் சுதர். இவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரவிந்திரன் சுதர்(வயது 7) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

சம்பவத்தன்று வீட்டின் முதல் மாடியில் ரவிந்திரன் சுதர் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர் பாராத விதமாக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். 

குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews