செய்திகள்

மாணவர் தற்கொலை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் புதுவை பல்கலைக்கழகம் விளக்கம்

புதுவை பல்கலைக்கழகம் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், மாணவரின் செயல்பாடு குறித்த தகவல்களை திரட்டி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது.

மாலை மலர்

சேதராப்பட்டு:

புதுவை பல்கலைக்கழக மாணவர் சசிகாந்த் போரா புளூவேல் விளையாட்டால் நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதுவை பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

இதையடுத்து புதுவை பல்கலைக்கழகம் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், மாணவரின் செயல்பாடு மற்றும் புதுவை காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்த தகவல்களை திரட்டி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது.

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட சசிகாந்த் போராவின் தந்தை ராம்குமார் போரா புதுவை வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்கு பின் மாணவரின் உடலை ஒப்படைக்கிறார்கள்.