கைது 
செய்திகள்

மாணவி பாலியல் பலாத்காரம் - வங்கி ஊழியர் போக்சோவில் கைது

கோவையில் வீடு புகுந்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாலை மலர்

கோவை:

கோவை செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார்.

இதனை அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.