கைது 
செய்திகள்

மதுரையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

மதுரை:

மதுரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி, காதலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவியின் தாயார், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், சோலையழகுபுரம் அய்யப்பன் நகரைச் சேர்ந்த பிரபு (வயது 27) என்பவர், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பிரபுவை கைது செய்தனர்.