செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சாளர்கள்-பாதுகாப்பு படையினர் மோதல்: மாணவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

மாலை மலர்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை கண்டுபிடித்து அழிக்கும் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை தடுக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இரு தரப்பிற்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஷோபியான் மாவட்டம் கானோபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று மாலை அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, இளைஞர்கள் ஒன்று திரண்டு பாதுகாப்பு படையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.