மதுரை:
உசிலம்பட்டி அருகே உள்ள எரவார்பட்டியை அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் சரண்யா (வயது16), 9-ம் வகுப்பு மாணவி.
இவர் பள்ளிககு சென்ற போது பொம்மம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கேலி செய்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை சரண்யா நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தாயாருடன் சரண்யா ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ரஞ்சித் உள்பட சிலர் அங்கு வந்து அவரை கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் குபேந்திரன் புகார் செய்தார். அதில் சரண்யாவை திருமணம் செய்வதற்காக கடத்தி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், அவரது தந்தை மாயி, தாய் லிங்கேஸ்வரி, உறவினர்கள் இளஞ்சியம், சரத், சரண், ராசு, ஆதி, ஜெயராமன், கலா, போதுமணி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews