கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1- படித்து வருகிறார். இம்மாணவிக்கும், எரும்பட்டி அருகே உள்ள முட்டான்செட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுதாகர், பி.இ. படித்துள்ளார்.
இந்த நிலையில் சுதாகர், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுதாகர் மீது புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், பாலியல் தொந்தரவு, பென்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர்.