கெஜ்ரிவால் 
செய்திகள்

டிராக்டர் பேரணி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: கெஜ்ரிவால்

டெல்லி டிராக்டர் பேரணி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “ஜனவரி 26-ம் தேதி நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது. அதற்கு உண்மையில் காரணமான எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அன்று என்ன நடந்திருந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது. நாம் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், ஆனால் அமைதியான முறையில்” என தெரிவித்துள்ளார்.