சூறாவளி காற்றில் சாய்ந்து சேதமான வாழைகளை படத்தில் காணலாம். 
செய்திகள்

பொள்ளாச்சி பகுதியில் சூறை காற்றுடன் மழை: 1000 வாழைகள் நாசம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறை காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 1000 வாழைகள் சாய்ந்து சேதமானது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மேலும் இடி-மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.

வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் சில இடங்களில் சூறை காற்றில் வாழைகள் சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் நஷ்டமடைந்து உள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் 2 ஏக்கரில் தென்னந்தோப்பு வைத்துள்ளார். இதில் ஊடுபயிராக 2 ஆயிரம் வாழைகளை பயிரிட் டுள்ளார். இந்த வாழைகள் குலை தள்ளிய நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை சூறை காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 1000 வாழைகள் சாய்ந்து சேதமானது. சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமானதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT