புதுச்சேரி:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதையடுத்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது வங்காள தேசம் அருகே 180 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாகை, கடலூர், புதுவை ஆகிய கடற்கரை மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வருகிற 14-ந்தேதிவரை மீன்படி தடைகாலம் உள்ளதால் புதுவையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.