செய்திகள்

காஷ்மீரில் உரிமமின்றி ஒளிபரப்பாகும் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபிய சேனல்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முறையான உரிமம் இன்றி ஒளிபரப்பாகும் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சேனல்களை முடக்க மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த சேனல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் அரசிடம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துயுள்ளதாகவும் விரைவில் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை வழங்க மாநில அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.