செய்திகள்

ஸ்டோன்மேன், வின்ஸ் அரைசதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஸ்டோன்மேன், வின்ஸ் அரைசதத்தால் இங்கிலாந்து வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. #NZvENG

மாலை மலர்

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது. விக்கெட் கீப்பர் வாட்லிங் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். கிராண்ட்ஹோம் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் 77 ரன்னுடனும், டிம் சவுத்தி 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வாட்லிங் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சவுத்தி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். இந்த மூன்று பேரின் ஆட்டத்தால் நியூசிலாந்து 278 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இருவரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து 29 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 29 ரன்களுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அலஸ்டைர் குக் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வின்ஸ் களம் இறங்கினார். இவர் ஸ்டோன்மேன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்தனார். ஸ்டோன்மேன் 60 ரன்னிலும், வின்ஸ் 76 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 30 ரன்னுடனும், தாவித் மலன் 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.