செய்திகள்

அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் மீட்பு

அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிளை மத்திய புலனாய்வு போலீசார் நெதர்லாந்தில் மீட்டனர். #CarnegieLibrary #Bible

மாலை மலர்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற புகழ்பெற்ற நூலகம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த புத்தகங்களுடன், பழங்கால அரிய பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.56 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம்) மதிப்புடைய 300-க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடி சென்றனர். இதில் 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் ஒன்று.

திருட்டு சம்பவம் நடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். திருடுபோன அரிய பொக்கிஷங்களை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தினர்.