செய்திகள்

துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்பனை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு போகவில்லை.

SCROLL FOR NEXT