செய்திகள்

நாசரேத்தில் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நாசரேத்தில் ஸ்டெர்லைட்டை ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #BanSterlite #TalkAboutSterlite

நாசரேத்:

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, ஏற்கனவே இயங்கி வரும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் அரசியல் கட்சிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நாசரேத் கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து திடீரென்று ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் இழுத்து மூடு, இழுத்து மூடு ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு, வேண்டாம் வேண்டாம் ஸ்டெர்லைட் வேண்டாம் என மாணவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிரு‌ஷணன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். #BanSterlite #TalkAboutSterlite

SCROLL FOR NEXT