செய்திகள்

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: நிதின், ரீத் ரிஷ்யா சாம்பியன்

ராம் டேபிள் டென்னிஸ் கிளப் சார்பில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மவுண்ட் ஆதரவுடன் 6-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் நிதின், ரீத் ரிஷ்யா வெற்றி பெற்றனர்.

மாலை மலர்

சென்னை:

ராம் டேபிள் டென்னிஸ் கிளப் சார்பில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மவுண்ட் ஆதரவுடன் 6-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நிதின் திருவேங்கடம் சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 11-5, 8-11, 11-8, 7-11, 11-6, 11-6 என்ற கணக்கில் சந்தோஷ்குமாரை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரீத் ரிஷ்யா 11-6, 7-11, 11-4, 12-10, 11-8 என்ற கணக்கில் வித்யாவை வீழ்த்தி பட்டம் பெற்றார்.

மற்ற பிரிவில் தேஜஸ்ராம், பிரியூஸ், பியூசாகர், ஆனந்த், ‌ஷர்வானி, நேகல், ‌ஷர்மிதா, சுவேதா, ஹர்ஸ்வர்த்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்தறிவு குழு தலைவர் ராம் என்.ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.