சென்னை:
இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஐ.ஓ.பி. அரை இறுதியில் ஐ.சி.எப்.யை சந்திக்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 2-1 என்ற கணக்கில் மத்திய கலால் வரியை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. தெற்கு ரெயில்வே அரை இறுதியில் இந்தியன் வங்கி அல்லது ஹாக்கி அகாடமியை சந்திக்கிறது.
இந்த இரு அணிகள் மோதும் கால்இறுதி ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.