செய்திகள்

மாநில பீச் வாலிபால் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

வாலிஸ் கிளப் சார்பில் மாநில பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

மாலை மலர்

சென்னை:

வாலிஸ் கிளப் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் அனுமதியுடன் மாநில பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 100 அணிகளும், பெண்கள் பிரிவில் 90 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்லும் அணியினர், சென்னை மெரினா கடற்கரையில் மார்ச் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறும் தேசிய பீச் வாலிபால் போட்டிக்கான தமிழக அணியில் இடம் பெறுவார்கள். இந்த தகவலை தமிழ்நாடு கைப்பந்து சங்க அசோசியேட் செயலாளர் எம்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.