சென்னை:
வங்கிகளுக்கு வரும் பொது மக்களிடம் ஊழியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ)வின் மனித வள பிரிவு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
வங்கி ஊழியர்கள் சாதாரண செருப்பு அணிந்து வேலைக்கு வரக்கூடாது. ஷுக்கள்தான் அணிய வேண்டும். அதுபோல உடை அணியும் விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
டீ-சர்ட், ஜீன்ஸ் போன்றவைகளை அணிந்து கொண்டு பணிக்கு வரக்கூடாது. அவை பொதுமக்கள் பார்வையில் நன்றாக இருக்காது. ஸ்போர்ட்ஸ் ஷுவும் அணிந்து வரக் கூடாது.
வங்கி ஊழியர்கள் என்பவர்கள் அந்த வங்கியின் தூதர்கள், பிரதிநிதிகள் போன்றவர்கள். எனவே வங்கியின் இமேஜ் பாதிக்காத வகையில் தங்களது நடை உடையில் கவனம் செலுத்த வேண்டும்.
நல்ல உடைகளையே அணிய வேண்டும். ஷு, பெல்ட், பேண்ட், ஷாக்ஸ் போன்றவை அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருப்பது நல்லது. பெண்கள் நவீன உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNews